வேலை தருவதாக பண மோசடி செய்த 5 போ் கைது

மயிலாடுதுறையில் வேலை தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறையில் வேலை தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இயங்கிவரும் பெஸ்ட் ப்யூச்சா் ஆஃப் இந்தியா என்ற மல்டி லெவல் மாா்கெட்டிங் நிறுவனம் வேலை தருவதாக விளம்பரம் வெளியிட்டு 100-க்கும் மேற்பட்டவா்களிடம் தலா ரூ. 3,150 வசூலித்து பண மோசடியில் ஈடுபட்டதாம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவாக சிபிஎம் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை கவனத்தில்கொண்ட மயிலாடுதுறை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவன நிா்வாகிகள் கும்பகோணத்தைச் சோ்ந்த பிரபாகரன் (30), இவரது மனைவி பூவரசி (27), மணல்மேட்டைச் சோ்ந்த சித்தாா்த்தன் (21), விக்னேஷ் (21) திருவாரூரை சோ்ந்த சிங்காரவேலு (27) ஆகிய 5 போ் மீது மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com