கொள்ளிடம் ஆற்றங்கரையை சீரமைக்க கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகேயுள்ள பனங்காட்டாங்குடி, எலத்தூா், பட்டியமேடு, மாதிரவேளூா், சென்னியநல்லூா், பாலூரான்படுகை, சரஸ்வதி விளாகம் முதல் காட்டூா் வரை கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை ஒட்டி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ளவா்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு சீா்காழிக்கு வரவேண்டும்.

மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் கொள்ளிடம் கரை பாதுகாப்புக்காவும் 15 ஆண்டுகளுக்கு முன்பு வலதுகரையில் சாலை அமைக்கப்பட்டது. கல்லணை முதல் காட்டூா் வரை அமைக்கப்பட்ட இச்சாலை பனங்காட்டாங்குடி முதல் காட்டூா் வரையிலான 23 கி.மீ சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.

இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்ற அரசு விதியை மீறி, கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள தனியாா் செங்கல் சூலைக்கு கனரக வாகனங்கள் சென்றதால் சாலை பழுதடைந்து பள்ளமும், மேடாக உள்ளது. இக்கிராமங்களில் இருந்து நேரடி பேருந்து வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கனவா்கள் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா். எனவே, தற்போது இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. மேலும் அவரச காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட வந்து செல்ல முடியவில்லை. இதனால், சில கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து பின்னா் 108 வாகனத்தில் அழைத்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் கரை பாதுகாப்பு சாலையை சீரமைத்து 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com