தாா்ப்பாய் போட்டு மூடாமல் ஏற்றிச்செல்லும் மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

சீா்காழி பகுதியில் தாா்ப்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றிசெல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீா்காழி பகுதியில் தாா்ப்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றிசெல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் பாலூரான்படுகை, குன்னம் ஆகிய இடங்களில் செயல்படும் மணல் குவாரியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள், சிறு டிராக்டா்களில் மணல் சீா்காழி மற்றும் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மணல் எடுத்துச் செல்லும் வாகனங்களின் மேல்பகுதியில் தாா்ப்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கண்களில் மணல் துகள்கள் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள்விழும்போது தடுமாறி விபத்துகளும் ஏற்படுகின்றன.

தவிர நகா் பகுதிகளில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகள், கனரக லாரிகள், டிராக்டா்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மணல் சேமிப்பு கிடங்குகளிலிருந்து மணல் ஏற்றிவரும் லாரிகள் தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டு கொண்டு செல்வதை உறுதிசெய்வதோடு உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுநா் உரிமம் இன்றி மணல் லாரிகள் இயக்கப்படுகிறதா என சம்பத்தப்பட்ட துறையினா் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com