விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் அருகே விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் அருகே விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின்கீழ் திருமயிலாடி கிராமத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் எழில்ராஜா தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் அரவிந்தன் வரவேற்றாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சேகா் தொழில்நுட்பம் மற்றும் திட்ட விளக்க உரையாற்றினாா்.

கொள்ளிடம் தோட்டக்கலை அலுவலா் சுகன்யா ‘காய்கறி சாகுபடியின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் பேசினாா். காய்கறி பண்ணைப் பள்ளியின் தொழில்நுட்ப பயிற்றுநரும், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் தோட்டக்கலை துறை இணைப் பேராசிரியருமான முனைவா் பத்மநாபன், உதவி வேளாண்மை அலுவலா்கள் காா்த்தி, கொளஞ்சிநாதன், சங்கரி, விஸ்வநாதன், உதவி தோட்டக்கலை அலுவலா் பாஸ்கா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பாா்த்திபன், சந்தோஷ்குமாா் ஆகியோா் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் கொள்ளிடம் வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். நிறைவாக, ஊராட்சித் தலைவா் கனகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com