சீர்காழியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு குமரக் கோயில் கும்பாபிஷேகம்

36 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழியில் குமரக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
சீர்காழியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குமரக் கோயில் கும்பாபிஷேகம்.
சீர்காழியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குமரக் கோயில் கும்பாபிஷேகம்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழியில் குமரக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த ,சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் நான்கு காலையாக சாலை பூஜைகள் நடைபெற்றது. 

விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடன்கள் புறப்பட்டு மேலதாளம் முழங்க கோயிலை வலம் வந்தது கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதில் சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை பீடாதிபதி சுவாமிகள், கோயில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கல்லூரி செயலர் செல்வநாயகம், சியாமளா பெண்கள் பள்ளி செயலர் முரளிதரன் டாக்டர் முத்துக்குமார் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், முன்னாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, மதிமுக மாவட்டச் செயலாளர் மார்க்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, வள்ளி முத்து, நித்யா தேவி பாலமுருகன், ராஜேஷ், தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், கியான்சந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com