மயிலாடுதுறை வட்டார பள்ளிகளின் கலைத்திருவிழா

மயிலாடுதுறையில் வட்டார அளவிலான பள்ளிகளின் கலைத்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
கலைத்திருவிழா போட்டிகளை தொடக்கி வைத்து பாா்வையிடும் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா்.
கலைத்திருவிழா போட்டிகளை தொடக்கி வைத்து பாா்வையிடும் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வட்டார அளவிலான பள்ளிகளின் கலைத்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மயிலாடுதுறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இவ்விழாவை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை கல்வி) தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, வேழமுறித்தான்பேட்டை தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஒருங்கிணைந்த திட்ட அலுவலா் ஞானசேகா், வளமைய மேற்பாா்வையாளா் முருகையன், வட்டாரக் கல்வி அலுவலா் பவுலின் ஆகியோா் கலைத் திருவிழாவின் நோக்கம் குறித்து பேசினா். வட்டாரக் கல்வி அலுவலா் ஜானகி வரவேற்றாா். தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தொடக்க நாள் நிகழ்ச்சியில் 36-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். விழாவில், கவின்கலை/நுண்கலை, இசை, நடனம், மொழித்திறன் மற்றும் நாடகம் ஆகிய 6 பிரிவுகளில், ஓவியம், பேச்சு, கட்டுரை, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், வெள்ளிக்கிழமை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com