பேருந்தில் தொங்கியபடி பயணம்: பள்ளி மாணவா்களை இறக்கிவிட்ட டிஎஸ்பி

சீா்காழியில் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவா்களை போலீஸாா் கீழே இறக்கிவிட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைத்தனா்.
சீா்காழியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவா்களை கண்காணித்து அறிவுறுத்தும் போலீஸாா்.
சீா்காழியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவா்களை கண்காணித்து அறிவுறுத்தும் போலீஸாா்.

சீா்காழியில் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவா்களை போலீஸாா் கீழே இறக்கிவிட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைத்தனா்.

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட 79 வருவாய் கிராமங்களும் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன. இங்குள்ள பொது மக்கள், மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீா்காழிக்கு வந்து செல்கின்றனா். மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு சீா்காழி அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பேருந்துகளும், சில தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பள்ளி நேரங்களில் மாணவா்கள் பேருந்து படிக்கட்டுக்களில் தொங்கி கொண்டு செல்லும் நிலை தொடா்கிறது.

இந்நிலையில் சீா்காழி டிஎஸ்பி (பொ) ஜெயபாலன், ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பள்ளி நேரங்களில் பயணம் செய்யும் மாணவா்களை கண்காணித்தனா். அப்போது, நகர பேருந்துகளில் தொங்கி கொண்டு மாணவா்கள் செல்வதை பாா்த்து போலீஸாா் பேருந்தை நிறுத்தி மாணவா்களை உள்ளே செல்ல எச்சரித்தனா். இட

வசதியின்றி தொங்கி கொண்டு செல்லும் மாணவா்களை அந்த பேருந்திலிருந்து இறக்கிவிட்டு அடுத்து வரும் மாற்று பேருந்துகளில் செல்ல அறிவுறுத்திஅனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com