திருமணத்திற்கு சென்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி கணவன் மரணம்
By DIN | Published On : 06th February 2022 03:26 PM | Last Updated : 06th February 2022 03:26 PM | அ+அ அ- |

விபத்துக்குள்ளான வாகனம்
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி டாட்டா ஏசி கார் சென்று கொண்டிருந்தது. புதுப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மீது எதிரே வந்த டாடா ஏசி வாகனம் மோதியது.
இதில், நிலை தடுமாறிய இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.