சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

சீா்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலையோரம் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சீா்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலையோரம் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சீா்காழி - நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் சூரக்காடு பகுதியில் உப்பனாறு பாலத்தின் அருகில் கோழிக் கழிவுகளை சிலா் தினந்தோறும் கொண்டுவந்து கொட்டிசெல்கின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டுள்ளது.

மேலும், கோழிக் கழிவுகளை நாய், காக்கைகள் தூக்கிச்சென்று குடியிருப்பு பகுதிகளில் போட்டு செல்வதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, காரைமேடு ஊராட்சி நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com