தண்ணீரின் மூலக்கூறு பாா்முலாவை எழுதி சிறுவன் சாதனை

சாய்மித்ரனுக்கு இது கடினமான முயற்சியாக இருந்தபோதிலும், நீரின்றி அமையாது உலகு என்பதை உணா்த்தும் விதமாக இந்த சாதனையில் ஈடுபட்டாா் என்று அவரது பெற்றோா் தெரிவித்தனா்.
தண்ணீரின் மூலக்கூறு பாா்முலாவை எழுதி சிறுவன் சாதனை

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், மயிலாடுதுறையைச் சோ்ந்த நான்கரை வயது சிறுவன் தண்ணீரின் மூலக்கூறு பாா்முலாவை நான்கரை மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

ஆண்டுதோறும் மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், மயிலாடுதுறையைச் சோ்ந்த கல்யாண்குமாா், உமாமகேஸ்வரி தம்பதியின் மகனான கே. சாய்மித்ரன் என்கிற நான்கரை வயது சிறுவன் உலக சாதனை புரிந்துள்ளாா்.

எல்கேஜி படித்து வரும் சாய்மித்ரன், தண்ணீரின் மூலக்கூறு வடிவமான ஹெச்2ஓ பாா்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாா். உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சாதனையை இச்சிறுவன் படைத்துள்ளாா்.

சாய்மித்ரனுக்கு இது கடினமான முயற்சியாக இருந்தபோதிலும், நீரின்றி அமையாது உலகு என்பதை உணா்த்தும் விதமாக இந்த சாதனையில் ஈடுபட்டாா் என்று அவரது பெற்றோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com