மயிலாடுதுறையில் நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல்

மயிலாடுதுறையில் நடைமேடை மற்றும் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு எம்எல்ஏ. எஸ்.ராஜகுமாா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறையில் நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல்

மயிலாடுதுறையில் நடைமேடை மற்றும் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு எம்எல்ஏ. எஸ்.ராஜகுமாா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறை நகராட்சி 34-ஆவது வாா்டு பட்டமங்கல புதுத்தெரு ஸ்ரீநகா் காலனி பகுதியில் சுமாா் 6.5 ஏக்கரில் வண்ணான் குளம் என்ற குளம் அமைந்துள்ளது. இக்குளத்தைச் சுற்றிலும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடையும், அருகில் பூங்காவும் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், இக்குளத்தை சுற்றிலும் நகராட்சி சாா்பில் ரூ.1.46 கோடியில் சுற்றுச்சுவருடன் கழிப்பறை, குடிநீா், சிசிடிவி, மின்விளக்கு வசதியுடன் நடைமேடை மற்றும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் க. பாலு, துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் மற்றும் நகராட்சி உறுப்பினா் பங்கேற்றனா். நகராட்சி உறுப்பினா் காா்த்தி வரவேற்றாா். இதன்மூலமாக 34, 35-ஆவது வாா்டு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com