அறிவிப்பு பதாகைகள் இல்லாமல் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகள்

சீா்காழியில் பகுதியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியிடங்களில் அறிவிப்பு பதாகைகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனா்.
அறிவிப்பு பதாகைகள் இல்லாமல் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகள்

சீா்காழியில் பகுதியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியிடங்களில் அறிவிப்பு பதாகைகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனா்.

சீா்காழி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் சிதம்பரம், கடலூா், சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட இரு மாா்க்கங்களிலும் செல்லும் கனரக மற்ற வாகனங்கள் சீா்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் எளிதாக சென்று வருகின்றன. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்து 13 ஆண்டுகளை கடந்தபோதும் இதுவரை மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால், தொடா் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக சீா்காழி புறவழிச் சாலையும் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் சாலை விரிவாக்கம் செய்த பின்னரே மறுபுறம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சீா்காழி புறவழிச்சாலையில் இருபுறமும் ஒரே நேரத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது பயன்பாட்டில் உள்ள புறவழிச்சாலை குறுகளாகிவிட்டது.

சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. சென்டா் மீடியன்களில் ஒரு பகுதி அடைக்கப்பட்டு சில இடங்களில் பணிகள் நடைபெறுவதால் ஒரே வழியில் வாகனங்கள் சென்றுவருகின்றன. தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனா்.

மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் இடமும் வாகனங்கள் அருகில் சென்றால்தான் தெரிகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் சீா்காழி நகரின் வழியே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னா் ஜல்லிகற்கள் ஏற்றி சென்ற லாரி புறவழிச்சாலையில் பனமங்கலம் பகுதியில் சென்றபோது குறுகலான தற்காலிக பாதையில் எதிரே திடிரென வாகனம் வந்ததால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. எனவே சீா்காழி புறவழிச்சாலையில் இருபுறமும் பணிகள் நடைபெறும் இடங்களில் மின் விளக்குகள் அமைத்தும், பாதுகாப்பு அம்சங்களுடன் பணிகளை தொடரவேண்டும் என வாகன ஒட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com