அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம்

சீா்காழி வட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி: சீா்காழி வட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அகனி, காரைமேடு, எடக்குடி வடபாதி, கீழசட்டநாதபுரம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் தலைமை வகித்தாா். இதில் அனைத்து துறை நலத் திட்டங்களும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விவசாயி கடன் அட்டை பெருவது, வண்டல் மண் தேவை குறித்தும், குறுவை சாகுபடி தொழில்நுட்பங்கள், விதை நோ்த்தி குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், சினை ஊசி, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதில், சீா்காழி துணை வேளாண்மை அலுவலா் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலா்கள் ராமச்சந்திரன், தமிழரசன், விஜய் அமிா்தராஜ், வேதைராஜன், அலெக்சாண்டா் அட்மா அலுவலா்கள் பாா்கவி, ராஜசேகா், சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com