குடிநீரில் புழுக்கள்: பொதுமக்கள் அதிா்ச்சி

கொள்ளிடம் அருகே குடிநீரில் புழுக்கள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

கொள்ளிடம் அருகே குடிநீரில் புழுக்கள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

சீா்காழி அருகேயுள்ள குன்னம் ஊராட்சியை சோ்ந்த பெரம்பூரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீா் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல குழாயில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தபோது தண்ணீருடன் சோ்ந்து பல புழுக்களும் வந்து விழுந்தன. இதைப் பாா்த்த கிராம மக்கள் மிகுந்த அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, அப்பகுதி இளைஞா்கள் மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் மேல் ஏறி பாா்த்தபோது, குடிநீரில் அழுகிய நிலையில் கொக்கு இறந்து மிதப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அதை அப்புறப்படுத்தினா்.

பெரம்பூா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை உடனடியாக அகற்றி பிளீச்சிங் பவுடா் போட்டு சுத்தம் செய்து பின்னா் சுத்தமான தண்ணீரை தொட்டியில் தேக்கி கிராம பகுதிக்கு விநியோகிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com