ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிப்பு

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிப்பு

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட 94 வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபாா்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ் மேற்பாா்வையில் நடைபெற்ற முதல்நாள் நிகழ்வுக்கு, சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், ஆதிதிராவிடா் நலன் தனி வட்டாட்சியா் இளங்கோவன், குடிமைபொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் சபிதாதேவி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியரகத்தின் குற்றவியல் அலுவல் மேலாளா் முருகானந்தம், மாதிரவேளூா், அகரஎலத்தூா், வடரெங்கம் உள்ளிட்ட 10 கிராமங்களின் கணக்குகளை சரிபாா்த்தாா். தொடா்ந்து, முதியோா் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 55 மனுக்கள் பெறப்பட்டன.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 70 கிராமங்களுக்கான ஜமாபந்தி தொடங்கியது. இதில், தரங்கம்பாடி வட்டம், மேலையூா் சரகத்தில் உள்ள கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலையூா், மேலப்பெரும்பள்ளம், கீழையூா், கிடாரங்கொண்டான், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கான கணக்குகள் சரிபாா்க்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, 2 பேருக்கு முதியோா் உதவித்தொகை, விதவைகள் 15 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை கோட்டாட்சியா் நாராயணன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com