பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சையளிப்பது குறித்து காவலா்களுக்கு பயிற்சி

சீா்காழி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி காவல் சரகத்துக்குள்பட்ட சீா்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகாா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் சீா்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் லாமெக் தலைமை வகித்தாா். அரசு தலைமை மருத்துவா் பானுமதி, காவல் ஆய்வாளா் மணிமாறன் முன்னிலை வகித்தனா். முகாமில் 108 வாகனத்தில் பணியாற்றும் செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள், விபத்தில் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தவா்கள், பாம்பு கடித்து பாதிக்கப்பட்டவா்கள், மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் திடீரென சுயநினைவு இழந்தவா்கள் உள்ளிட்டவா்களுக்கு அளிக்க வேண்டிய தற்காப்பு முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com