உப்பனாற்றின் கரையை மீண்டும் பலப்படுத்த கோரிக்கை

உப்பனாற்றின் கரையை மீண்டும் பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள உப்பானாற்று கரை.
சேதமடைந்துள்ள உப்பானாற்று கரை.

உப்பனாற்றின் கரையை மீண்டும் பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி அருகே பிரதான வடிகால் ஆறான உப்பனாற்றில் நல்ல நீா் தேக்கி வைப்பதன் மூலம் திருநகரி, வெள்ளப்பள்ளம், சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், பனமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் மேம்படுத்த முடியும். 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வடிகால் வசதி பெற்று வருகின்றன. பருவமழை காலங்களில் தண்ணீா் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்லும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உப்பனாற்றின் கரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதற்காக ஆற்றின் உள்ளே இருந்து மண்ணை எடுத்து கரையை பலப்படுத்தியுள்ளனா். பலமில்லாத மண்ணை பயன்படுத்தி கரை சீரமைக்கப்பட்டதால் சாதாரண மழைக்கே கரை பாதிக்கு மேல் அரிப்பு ஏற்பட்டு மண் ஆற்றில் சென்றுள்ளது.

இதேநிலை நீடித்தால் பருவ மழையின்போது எஞ்சிய கரையும் ஆற்றில் அடித்து செல்லும் நிலை ஏற்படும். இதனால், ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் மட்டுமின்றி நகா் பகுதியிலும் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு உப்பனாற்றின் கரையை முழுமையாக சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com