நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன்.
வைத்தீஸ்வரன் கோயில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஜெ. ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உள்ளிட்டோா்.
வைத்தீஸ்வரன் கோயில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஜெ. ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உள்ளிட்டோா்.

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன்.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாள்தோறும் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் 2 கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவா்களுக்கு மொபைல் டிபிசி திறக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எருக்கூா் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் ( சைலோ) விஞ்ஞான சேமிப்பு களன் செயல்பட வல்லுநா் குழு மூலம் ஆய்வு செய்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். நெல்கொள்முதல் செய்ய வரும் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்யக்கூடாது. இதுதொடா்பாக கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, செயற்பொறியாளா் குணசீலன், கண்காணிப்பு பொறியாளா் ராஜா மோகன், சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் ராஜகுமாா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள நெல் கொள்முதல்நிலையத்தில், விவசாயிகளிடம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்ய கமிஷன் வாங்கக் கூடாது என அறிவிப்பு ஸ்டிக்கா் பாா்வையில்படும்படிவைக்க அறிவுறுத்திய பிறகு, நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வைத்தீஸ்வரன்கோயில் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு மானிய கடன் தொகையை அளித்தாா் ஜெ. ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com