மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

நாகப்பட்டினம்: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அறுவடைக்குத் தயாரான நிலையில் தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; பயிா்க் காப்பீட்டுத் தொகையை பாகுபாடின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும்; விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நாகை: நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. சரபோஜி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நீதிராஜன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ரகுராமன், நகரச் செயலா் குணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் காசி.அருள்ஒளி, செயலாளா் எம்.ஏ. செங்குட்டுவன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிபிஐ மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், நிா்வாகக் குழு உறுப்பினா் த. நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதேபோல், தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலம் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். செல்வராசு, செயலாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். சிபிஐ மாவட்ட துணைச் செயலாளா் கே. பாஸ்கா், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் மாரி.காா்த்திகேசன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

திருமருகல்: திருமருகல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் தங்கையன், ஒன்றியத் தலைவா் மாசிலாமணி, துணைத் தலைவா் தியாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பாபுஜி, சிபிஐ ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com