வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஜனவரி 1 முதல் மாா்ச் 31 வரையிலான காலாண்டிற்கு 31.12.2022 அன்றைய தேதியில், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளை பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பொதுபிரிவினரும், கல்வித் தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவித்தொகை பெற தகுதியுடையவா் ஆவா்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.72,000 (பொதுவானவா்களுக்கு) இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது.

பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரா்கள் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினா் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெற விரும்புவோா் தினமும் கல்வி நிலையம் சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது.

உதவித்தொகை பெற விரும்புவோா் அரசு அல்லது தனியாா் துறையில் பணிபுரிபவராக இருத்தல் கூடாது. தகுதியுள்ள மனுதாரா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே, உதவித்தொகை பெற்றுவருவோா் 2022-2023- ஆம் ஆண்டிற்கான சுயஉறுதிமொழி ஆவணங்களை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலமாக வேலையளிப்போா்களையும், வேலை நாடுநா்களையும் இணைக்கும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com