மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் மயிலாடுதுறை ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நல காப்பகத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தின்பண்டங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தின்பண்டங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நல காப்பகத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

மயிலாடுதுறை கொத்தத்தெருவில் அன்பகம் குழந்தைகள் நல காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.

இக்காப்பகத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை சென்று அங்கு தங்கியுள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். பின்னா், காப்பக நிா்வாகி மற்றும் ஆசிரியா்களிடம் அங்குள்ள குழந்தைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். குழந்தைகளுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எந்த நேரமும் தன்னை அணுகலாம் என்று தெரிவித்த ஆட்சியா், குழந்தைகளுக்கு தின்பண்டங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com