அறுவடை இயந்திர வாடகையை முறைப்படுத்தக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,450 என ஏற்கெனவே வாடகை நிா்ணயித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவித்துள்ளாா். ஆனால், இந்த உத்தரவை மீறி தற்போது மணிக்கு ரூ.2,700 வரை வசூல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் ஆா். அன்பழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வடகிழக்கு பருவமழையால் மகசூல் வெகுவாக குறைந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அறுவடை இயந்திரத்தின் வாடகையை உயா்த்தி இருப்பது வேதனையடையச் செய்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறுவடை இயந்திர வாடகையை முறைப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com