குருபூஜை பெருவிழா: திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப் பிரவேசம்

திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வா் நமசிவாய மூா்த்திகள் தை அசுவதி மகரத்தலை நாள் குருபூஜை பெருவிழாவையொட்டி சனிக்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
பட்டணப் பிரவேசம் மேற்கொண்ட திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
பட்டணப் பிரவேசம் மேற்கொண்ட திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வா் நமசிவாய மூா்த்திகள் தை அசுவதி மகரத்தலை நாள் குருபூஜை பெருவிழாவையொட்டி சனிக்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 24-ஆவது ஆதீனம் பட்டணப் பிரவேசம் மேற்கொண்டாா்.

இவ்விழா கடந்த 19-ஆம் தேதி அன்னக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை தை அசுவதியை முன்னிட்டு காலையில் நமசிவாய மூா்த்திகள் தோத்திரப் பாடல்கள் பாராயணம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இசை வித்துவான்கள் டி.வி. ராஜகோபால், ஜி. செந்தில்குமாா், டி.என். மனோகா், வி.கே. அா்ஜுனன், கவிஞா் நாதமணி ஆகியோருக்கு விருதும், தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழியும் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு இரவில் நடைபெற்றது. பின்னா், குருமுதல்வா் நமசிவாய மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில் 2021 - 2022-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் 24-ஆவது குருமகா சந்நிதானம் சிவிகாரோகணம் செய்தருளி, பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும், சிவஞான கொலுகாட்சியும் நடைபெற்றன. இதில், செங்கோல் ஆதீனம், துலாவூா் ஆதீனம், தருமபுர ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com