விவசாயிகளின் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பயனடையுமாறு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பயனடையுமாறு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2021-2022-ஆம் ஆண்டு 37 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23-ஆம் ஆண்டில் 60 கிராம பஞ்சாயத்துகளிலும், நிகழாண்டு 47 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வேளாண்மை உழவா் நலத் துறையால் பல்வேறு நலஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களில் பயன் பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவா்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து உரிய முன்பதிவு செய்து இடுபொருள் உள்ளிட்ட திட்டப்பலன்களை பெற்றிட அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com