ஒரே நாளில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தாலுகா பொன்னூா் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த பிரஹன்நாயகி சமேத ஆபத்ஸகாயேஸ்வரா் சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, இதே கிராமத்தில் அமைந்துள்ள கரியமாணிக்கம் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், சீதளா மகாமாரியம்மன், காமாட்சியம்மன், அய்யனாா் உள்ளிட்ட மொத்தம் 8 கோயில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாட்டில் உள்ள சியாமளாவல்லி தாயாா், தங்க முனீஸ்வரா் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. வை. பட்டவா்த்தி கிராமத்தில் மகா மாரியம்மன், காலபைரவா், ஸ்ரீவலம்புரி செல்வவிநாயகா் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com