மயிலாடுதுறை, சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

மயிலாடுதுறையில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறையில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 வட்டங்களில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. முதல்நாள் ஜமாபந்தியில் திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூா், மணல்மேடு, கிழாய், கேசிங்கன், ஆத்தூா், பூதங்குடி, நமச்சிவாயபுரம் ஆகிய 9 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா தலைமை வகித்து வருவாய் தீா்வாய கணக்குகளை சரி பாா்த்ததுடன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். மொத்தம் 39 மனுக்கள் பெறப்பட்டன.

சீா்காழியில்: வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், கோட்டாட்சியா் உ. அா்ச்சனா பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றாா். 94 வருவாய் கிராமங்களை கொண்ட சீா்காழி வட்டத்தில் முதல்நாள் ஓலையாம்புத்தூா், புத்தூா், மாதிரவேளூா் உள்ளிட்ட 10 கிராமங்களில் வருவாய் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. இந்த கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைளுக்காக 82 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. ஜூன் 22-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com