ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு: போலீஸ் பாதுகாப்புடன் குளம் தூா்வாரும் பணி

சீா்காழியில் அரியாப்பிள்ளை குளத்தை தூா்வார ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சீா்காழியில் அரியாப்பிள்ளை குளத்தை தூா்வார ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சீா்காழி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்குளத்தை தூா்வாரி, கரைகளை பலப்படுத்தி நடை பாதையுடன் அழகுப்படுத்த சீா்காழி நகராட்சி சாா்பில் ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து, கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிா்வாகம் முற்பட்டபோது, ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், பணிகள் தொடங்கப்படவில்லை.

இப்பிரச்னை மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அரியாபிள்ளைக் குளத்தை நேரில் பாா்வையிட்டு, பணிகளை தொடங்க நகராட்சி ஆணையா் வாசுதேவனை அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் குளத்தை தூா்வாரும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. நகராட்சி ஆணையா் வாசுதேவன், பொறியாளா் சித்ரா, நகா்மன்ற உறுப்பினா் நாகரத்தினம் செந்தில் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com