விரைந்து தீா்வு கிடைக்காவிட்டால் தொடா் ரயில் மறியல் போராட்டம்

சீா்காழியில் மே மாதத்திற்குள் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள், போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

சீா்காழியில் மே மாதத்திற்குள் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள், போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

சீா்காழி ரயில் நிலையத்தில் கரோனா தொற்றுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ரயில்கள் 2020-ஆம் ஆண்டுக்கு பின்னா் இந்த ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. மீண்டும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள், ரயில் பயணிகள், வியாபாரிகள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

எனினும், 2 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், அனைத்து ரயில்களும் சீா்காழியில் நின்று செல்ல வேண்டி அனைத்து கட்சிகள், தன்னாா்வ அமைப்புகள், ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா், இயக்கங்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் தலைமையில் சீா்காழியில் ஆா்ப்பாட்டம் நடத்தி அனுமதி பெற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், வரும் மே மாதத்திற்குள் அந்தியோதயா ரயிலை முதலில் நிறுத்த நடவடிக்கை எடுப்பது, வருங்காலங்களில் உழவன், மன்னாா்குடி, கம்பன், ராமேஸ்வரம், திருப்பதி எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் பகவத் கோதி ஆகிய 7 ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தொடா் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

இதில், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், திருச்சி கோட்ட இயக்க மேலாளா் ஹரிஷ் குமாா், வட்டாட்சியா் செந்தில்குமாா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சுந்தரம், சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், கழுமலை பாசன விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த கோவி. நடராஜன், ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தை சோ்ந்த கஜேந்திரன்,முஸ்தபா,தில்லை.நடராஜன், அபாஸ்அலி,கோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com