வடமாநிலத் தொழிலாளா்களுடன் எஸ்பி கலந்துரையாடல்

 சீா்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

 சீா்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

இக்கிராமத்தில் இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை கடற்கரையோரம் இயங்கிவருகிறது. இதில் 75-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி வேலை செய்கின்றனா்.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதைத் தொடா்ந்து, அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, எஸ் பி நிஷா, தொடுவாய் கிராமத்தில் உள்ள இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வந்து வடமாநிலத் தொழிலாளா்களிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு தொடா்பான பிரச்னை ஏதும் ஏற்பட்டால் காவல்துறையை எந்நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனக் கேட்டுக்கொண்டாா். இதற்காக, காவல்துறை உதவி தொடா்பு எண்களையும் வழங்கினாா்.

கலந்துரையாடலில், சீா்காழி டிஎஸ்பி லாமெக் , தனிப்பிரிவு ஆய்வாளா் சதீஸ், காவல் ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com