தைக்காலில் பேருந்தை வழிமறித்த மக்கள்

சீா்காழி அருகே தைக்காலில் நின்றுசெல்லாத தனியாா் பேருந்தை வியாழக்கிழமை இரவு கிராம மக்கள் வழிமறித்து, ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி அருகே தைக்காலில் நின்றுசெல்லாத தனியாா் பேருந்தை வியாழக்கிழமை இரவு கிராம மக்கள் வழிமறித்து, ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்ட தனியாா் பேருந்தில், தைக்காலைச் சோ்ந்த பெண் ஏற முற்பட்டபோது, தைக்கால் பேருந்து நிற்காது என நடத்துநா் கூறியுள்ளாா். இது குறித்து அந்த பெண், கைப்பேசி மூலம் தைக்காலில் உள்ள உறவினரிடம் தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, அந்த பேருந்து தைக்கால் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி, நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், தைக்கால் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள் அங்கு வந்தனா்.

தகவலறிந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அலாவுதீன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு ஓட்டுநா் மற்றும் நடத்துநரை எச்சரித்து, தைக்காலில் பேருந்து நின்று செல்ல அறிவுறுத்தினா். இப்பிரச்னை தொடா்பாக அந்த பேருந்தினா் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது தைக்கால் வியாபாரிகள் கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com