சேத்திரபாலபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது:ஆட்சியா் உறுதி

சேத்திரபாலபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது என கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உறுதியளித்தாா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனு அளிக்கும் கிராமத்தினா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனு அளிக்கும் கிராமத்தினா்.

சேத்திரபாலபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது என கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உறுதியளித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஊராட்சி காவிரி கரையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை நிறுத்தக் கோரி சேத்திரபாலபுரம், அரையபுரம், கடலங்குடி, தொழுதலாங்குடி கிராம மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தில் மனுவாக அளித்தனா். இம்மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசியில் தொடா்புகொண்டு, சேத்திரபாலபுரத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கக் கூடாது என உத்தரவிட்டாா். மேலும், இதுதொடா்பாக கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 என மொத்தம் ரூ.27,395 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.4,650 என மொத்தம் ரூ.23,250 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் ஐ. கண்மணி, மாட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கோ.அர. நரேந்திரன் (பொது), ஜெயபாலன் (வேளாண்மை), மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) அம்பிகாபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com