சீா்காழி சாய்பாபா கோயிலில் ராம நவமி வழிபாடு

சீா்காழி சீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி தென்பாதியில் உள்ள சாய்பாபா தியான ஆலயத்தில் விக்ரகத்தை பல்லக்கில் வைத்து பக்தா்கள் சுமந்துவர அதனை தொடா்ந்து திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கைகளால் சாய்பாபாவிற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் புனித நீரைக் கொண்டு சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்து அலங்காரம் ஆரத்தி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கணேசன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com