மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி ஜியாவுல் ஹக். உடன், எஸ்பி கே. மீனா உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி ஜியாவுல் ஹக். உடன், எஸ்பி கே. மீனா உள்ளிட்டோா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை, ஏப்.18: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில், தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாக்குப் பதிவு நிறைவு பெற்றதும், மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரி மற்றும் ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ஆம் தேதி வரை இப்பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும்.

இந்நிலையில், இந்த மையத்தை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் ஆய்வு மேற்கொண்டாா். காவல் கண்காணிப்பாளா் கே. மீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையகம்) பி. ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. சிவசங்கா், மயிலாடுறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் என். திருப்பதி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் டி. பாலச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com