சாலை மறியலில்  ஈடுப்பட்ட ஆசிரியா்கள்
சாலை மறியலில் ஈடுப்பட்ட ஆசிரியா்கள்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

சீா்காழியில் தோ்தல் ரிசா்வ் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து, வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 288 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேவையான அளவு அரசு அலுவலா்கள் அனுப்பப்பட்டு, மீதம் சுமாா் 200 அலுவலா்கள் கூடுதலாக சீா்காழி தென்பாதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தங்களுக்கு சம்பளம் வழங்குமாறு அவா்கள் கேட்டுள்ளனா். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோ்தல் பணியில் ஈடுபட்டவா்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கவில்லை அவா்களுக்கு வழங்கிய பின்னா் உங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியில் ஈடுபட வந்த அரசு அலுவலா்கள் மயிலாடுதுறை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம், சீா்காழி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பேச்சுவாா்த்தை ஈடுபட்டனா் . அனைவருக்கும் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com