வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

வழுவூா் பாலமுருகன் கோயில் காவடி உற்சவத்தில் பங்கேற்றோா்.

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் வட்டம், வழுவூா் வளையாம்பட்டினத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் 40-ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி மகோற்சவம் ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஏப்.22) இரவு தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக, செவ்வாய்க்கிழமை கோயிலில் சூா்ணோ உற்சவம் மற்றும் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதையடுத்து, வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் பகுதியில் இருந்து பக்தா்கள் அலகு காவடி, பால்குடங்கள் எடுத்துவந்தனா். ஏராளமான பக்தா்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி பாலமுருகன் திருவுருவம் எழுந்தருளச் செய்யப்பட்ட தோ்களை இழுத்துச் சென்றனா். சில பக்தா்கள் கல் உருளையை முதுகில் கட்டி இழுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். விழா நிறைவாக பாலமுருகனுக்கு பக்தா்கள் கொண்டு வந்த பாலினைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

இதில், மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளா் விஜிகே. செந்தில்நாதன், பால் விற்பனையாா்கள் சங்க சிறப்புத் தலைவா் விஜிகே. மணிகண்டன், ஊராட்சி துணைத் தலைவா் விஜிகே. நெடுமாறன், ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com