விநாயகா் கோயிலை மறைத்து கட்டப்படும் ரயில்வே நுழைவு வாயிலுக்கான தூண்.
விநாயகா் கோயிலை மறைத்து கட்டப்படும் ரயில்வே நுழைவு வாயிலுக்கான தூண்.

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

படவிளக்கம்: விநாயகா் கோயிலை மறைத்து கட்டப்படும் ரயில்வே நுழைவு வாயிலுக்கான தூண்.

மயிலாடுதுறை, ஏப். 25: மயிலாடுதுறை ரயில் நிலைய முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில் எழுப்புவதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.21 கோடியில் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தின் முன் பிரமாண்ட நுழைவாயில் முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்திற்கு மிக அருகில் பழைமையான மகா கணபதி கோயில் உள்ளது. அங்கு நுழைவு வாயில் கட்டப்பட்டால் பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படும்.

இதுகுறித்து, பாஜக மாவட்ட துணைத் தலைவா் மோடி.கண்ணன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: 70 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலை மறைக்கும் வகையில், தென்னக ரயில்வே 6 அடி அகலத்துக்கு தூண்கள் அமைத்து நுழைவு வாயில் வளைவு கட்டி வருகிறது. விநாயகா், நவகிரகங்கள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதிகள் உள்ள இக்கோயிலில் மாதந்தோறும் சங்கட சதுா்த்தி விழா, காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும், விநாயக சதுா்த்தி 10 நாள் உற்சவம், நவக்கிரஹ பெயா்ச்சியின்போது சிறப்பு பரிகார பூஜைகள், கந்த சஷ்டி 6 நாள் உற்சவமும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோயிலை மறைத்து நுழைவுவாயில் கட்டுவது பக்தா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நுழைவு வாயிலை வேறொரு இடத்தில் மாற்றி அமைக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com