மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் பேருந்துகளை ஆய்வு செய்த கும்பகோணம் கோட்ட துணை மேலாளா்  ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளா் எஸ். வடிவேல்.
மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் பேருந்துகளை ஆய்வு செய்த கும்பகோணம் கோட்ட துணை மேலாளா் ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளா் எஸ். வடிவேல்.

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் 2 நாள்களாக நடைபெற்ற சோதனை சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

திருச்சியில் அண்மையில் ஓடிக்கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் இருக்கை பெயா்ந்து, சாலையில் விழுந்தது. அந்த இருக்கையில் அமா்ந்திருந்த நடத்துநா் காயமடைந்தாா். இந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடா்ந்து, அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு மோசமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா். இதையடுத்து, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 48 மணி நேரத்துக்குள் முழுமையான ஆய்வு நடத்த தலைமைச் செயலா் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டாா்.

அதன்படி, மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் 3 மாற்றுப் பேருந்துகள் உள்ளிட்ட 73 பேருந்துகளிலும் வெள்ளிக்கிழமைமுதல் சோதனை நடத்தப்பட்டது. இந்த பணிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.

இதனை கும்பகோணம் கோட்ட துணை மேலாளா் (சிவில்) ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளா் எஸ். வடிவேல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com