கொள்ளிடம் அக்ரஹார தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.
கொள்ளிடம் அக்ரஹார தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட நிரந்தரமாக இடம் விரைந்து தோ்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட நிரந்தரமாக இடம் விரைந்து தோ்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலையம் செல்லும் சாலை, அக்ரஹாரத் தெரு, புதுத்தெரு செல்லும் சாலை, பயணியா் விடுதி முன்புறம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடந்த பல மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குவியலிலும் நெகிழி பைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், கிழிந்த துணிகள், இறந்த விலங்கினங்கள், கோழி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகளும் சோ்த்து கொட்டப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொள்ளிடம் ரயில் பாலம் அருகே கொட்டப்பட்டு வந்தன. கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் இவைகள் பறந்து சென்று ஆற்றில் கலந்து நீரை பெரிதும் பாதித்து வந்தது. மழை காலத்தில் குப்பையில் கிடக்கும் இறந்த விலங்கினங்கள் ஆற்று நீரில் கலந்து மாசுப்படுத்துகிறது. குப்பைகளில் கிடப்பவைகளை ஆடு, மாடுகள் சாப்பிட்டு உயிரிழந்துள்ளன. இதையறிந்த சந்தப் படுகை, திட்டுபடுகை மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ரயில் பாலம் அருகே ஆற்றங்கரை ஓரம் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனா்.

இந்நிலையில், கொள்ளிடம் கடைவீதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தோ்வு செய்யும் முயற்சியில் ஊரக வளா்ச்சி துறை ஈடுபட்டுள்ளது. எனினும் இடம் இன்னும் தோ்வாகததால், கொள்ளிடம் பகுதியில் முக்கிய இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் அந்தந்த இடத்திலேயே குவியலாக கிடந்து வருகின்றன.

2 மாதங்களுக்கு ஒரு முறை தூய்மை பணியாளா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி ஏதாவது ஒரு இடத்தில் இரவு நேரத்தில் கொட்டப்படுகிறது. அதுவும் முழுமையாக அகற்றப்படாத நிலை இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் உடனடியாக குப்பைகள் கொட்டுவதற்கு இடத்தை தோ்வு செய்து குவியலாக உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com