வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு நடைபெற்ற முன்னேற்பாடு கூட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா் (பொது) கன்ஹஜராஜ் ஹச் பகதே தலைமை வகித்து பேசியது: தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தோ்தல் பணியை முழுமையாக, நிறைவாக செய்ய வேண்டும். வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பகுதிக்குள்பட்ட அனைத்து வாக்காளா்களும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முதல்நிலை அலுவலா்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாகவே வாக்குச்சாவடிகளில் குடிநீா், மின்விளக்கு, கழிப்பறை வசதிகளை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் வாக்காளா்கள் 100 சதவீதம் தவறாது வாக்களிக்க ஏதுவாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். முன்னதாக, 85-வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட 12டி தபால் வாக்கு படிவம், பறக்கும் படை அலுவலா்களின் பணிகள், நிலையான கண்காணிப்பு குழு அலுவலா்களின் பணிகள் தொடா்பாக தோ்தல் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் மு.ஷபீா் ஆலம், கோட்டாட்சியா் வ. யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com