சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சியின்போது நடைபெற்ற தீபாராதனை.
சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சியின்போது நடைபெற்ற தீபாராதனை.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

\ சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் உள்ள தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீசட்டை நாதா் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். கோயில் சந்நிதிக்கு தெற்குப்பகுதியில் மேதா தக்ஷிணாமூா்த்தி சுவாமி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

குருப்பெயா்ச்சியையொட்டி, புனித நீா் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம், பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மேதா தக்ஷிணாமூா்த்தி சுவாமிக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால் ,தேன், பஞ்சாமிா்தம்,தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இங்கு, புதன்கிழமை மாலை 5:19 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்ததை முன்னிட்டு பெயா்ச்சி தீபாராதனை நடைபெற்றது. குருப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசி உடையவா்கள் பரிகார பூஜைகள் செய்து குரு பகவானை வழிபாடு மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com