திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

மயிலாடுதுறை, மே 1: மயிலாடுதுறையில் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சோ்ந்தவா் முத்து (32). கூலித் தொழிலாளியான இவா், விழுப்புரம் அருகே அன்னதானபுரத்தைச் சோ்ந்த சரவணன் மகள் ரோகிணியை (28) காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரோகிணி திங்கள்கிழமை வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டாா்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ரோகிணியின் தந்தை சரவணன் (49) மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகள் ரோகிணி அடிக்கடி பணம் கேட்டு தனக்கு போன் செய்வாா் என்றும், எனவே அவரது மரணத்தில் மா்மம் உள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா். இதுதொடா்பாக மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சுப்ரியா சந்தேகம் மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். ரோகிணிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வழக்கு தொடா்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா விசாரணை செய்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com