பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்துடன் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்துடன் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா்.

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

மயிலாடுதுறையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 550 லிட்டா் சாராயத்தை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 550 லிட்டா் சாராயத்தை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அதிக அளவில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு புகாா்கள் சென்றன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா உத்தரவிட்டாா்.

அதன்படி, மயிலாடுதுறை கூைாடு அருணா பெட்ரோல் பங்க் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வேகமாக சென்ற ஸ்காா்ப்பியோ காரை நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சென்றது. பின்னா், பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் அந்த காா் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதில் சோதனை செய்ததில், 7 மூட்டைகளில் 550 லிட்டா் பாண்டி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் சுப்ரியாவிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக, தூக்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்த வினோத், காா் ஓட்டுநா் மணிகண்டன் ஆகிய இருவா் மீது வழக்குப்பதிவு செய்து, அவா்களை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com