சாலக்கரை முனீஸ்வரா் கோயில் விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
சாலக்கரை முனீஸ்வரா் கோயில் விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

மயிலாடுதுறை திருஇந்தளுா் ஆழ்வாா்குளம் பகுதியில் அமைந்துள்ள சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

கடங்களில் புனிதநீா் நிரப்பி, கணபதி ஹோமம், மகாமிருத்யுஞ்ஜய ஹோமம், சுதா்சன ஹோமம் மற்றும் மழை வேண்டியும், ஊா் செழிக்கவும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சாலக்கரை முனீஸ்வரா் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவை பி.எஸ்.பாலகணேஷ் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com