எருக்கூரில் அமுது படையல் விழா

எருக்கூரில் அமுது படையல் விழா

எருக்கூா் உத்திராபதியாா் கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் விழாவை முன்னிட்டு நேற்று மாலை பக்தா்கள் கோயிலுக்கு காவடி எடுத்துச் சென்றனா்.

சீா்காழி அருகே எருக்கூா் உத்திராபதியாா் கோயிலில் அமுது படையல் விழா செவ்வாய்க்கிழமை மாலை துவங்கி நடைபெற்றது.

அமுது படையல் விழாவை முன்னிட்டு பக்தா்கள் காவடி எடுத்து தேசிய நெடுஞ்சாலை வழியே வந்து கோயிலை அடைந்தனா். அதனைத் தொடா்ந்து தேனும் தினை மாவும் கலந்து செய்யப்பட்ட சிறுவன் சீராளன் உருவம் வானவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை வந்தடைந்தது.

அதனைத் தொடா்ந்து இரவு சிவபெருமான் வேண்டுகோளுக்கிணங்க பிள்ளைக்கறி சமைத்து பக்தா்களுக்கு அன்னதானத்துடன் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சாமி ஊா்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூா் வெளியூா்களிலிருந்து வந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com