வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

கொள்ளிடம் அருகே மின்னல் பாய்ந்ததில் வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் புதன்கிழமை சேதமடைந்தன. கொள்ளிடம் பகுதியில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில், கூத்தியம்பேட்டை பகுதியில் ரமணா நகா் மற்றும் பிரதான சாலை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. அப்பகுதியில் மாலை வரை மின்விநியோகம் தடைப்பட்டது. தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com