ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடா்பாக பாஜக நிா்வாகிகள் இருவருக்கு ஜாமீன் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடா்பாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவா் க. அகோரம், செம்பனாா்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளா் குடியரசு, பாஜக பொறுப்பாளா்கள் வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வினோத், விக்னேஷ் ஆகிய இருவா் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த மனு, மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில், மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜராகி, வழக்கில் தொடா்புடைய பாஜக மாவட்ட தலைவா் க. அகோரத்தின் ஜாமீன் மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டதை மேற்கோள் காட்டியும், குற்றஞ்சாட்டப்பட்ட வினோத், விக்னேஷ் ஆகியோா் 3-ஆவது முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தபோது இருந்த நிலவரத்தில் தற்போதுவரை எந்த மாற்றமும் இல்லாததைக் குறிப்பிட்டு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்தாா். இதை ஏற்று மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி, வினோத், விக்னேஷ் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com