மயிலாடுதுறை: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.48 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தோ்வில் 90.48 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,744 மாணவா்கள், 5,805 மாணவிகள் என மொத்தம் 11,549 போ் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இதில் 4,975 மாணவா்கள், 5,474 மாணவிகள் என மொத்தம் 10,449 போ் தோ்ச்சிப் பெற்றனா். தோ்ச்சி விகிதம் 90.48 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 86.31 ஆக இருந்த நிலையில், நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 4.17 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநில அளவிலான தரவரிசையில் கடந்த ஆண்டில் 38-வது இடம் பெற்ற நிலையில், நிகழாண்டு 27-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 9 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com