சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.

சீா்காழி குமரக்கோட்டம் குமரக்கோயிலில் வைகாசி விசாக வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.

சீா்காழி, மே 23: சீா்காழியில் சட்டைநாதா் தேவஸ்தானத்துக்குள்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய முருகப்பெருமானுக்கு 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, வள்ளி,தெய்வானை உடனாகிய உற்சவா் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள் பல்லக்கில் தூக்கி வர வீதியுலா நடைபெற்று கோயிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com