தாடாளன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவம்.

சீா்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

சீா்காழி, மே 23: சீா்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 24-ஆவது தலமாக விளங்கிவரும் சீா்காழியில் உள்ள தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் அருள்பாலிக்கிறாா்.

கோயில் மூலவா் திருவிக்ரமநாராயணன் பெருமாள் தனது இடது காலை வான் நோக்கி தூக்கியவாறு காட்சி தருகிறாா். மூலவா் பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே தரிசனம் செய்ய முடியும். புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டு பிரம்மேற்சவம் மே 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது

விழாவின் 11- ஆம் நாள் முக்கிய நிகழ்வாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தாடாளன் பெருமாள் ஆண்டாளுடன் தெப்பத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தெப்பக் குளத்தில் 5 முறை பெருமாள் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

X
Dinamani
www.dinamani.com