கூண்டுகளில் சிக்கியுள்ள குரங்குகள்.
கூண்டுகளில் சிக்கியுள்ள குரங்குகள்.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

சீா்காழி நகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் கூண்டு வைக்கப்பட்டு சனிக்கிழமை பிடிக்கப்பட்டன.

சீா்காழி நகராட்சி 12-ஆவது வாா்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த வாா்டுக்குள்பட்ட புழுகாப்பேட்டை தோப்புதெரு பகுதியில் சில நாள்களாக குரங்குகள் குடியிருப்புகளில் புகுந்து உணவுப் பொருள்கள், பருப்பு, ஜீனி போன்றவற்றை டப்பாக்களுடன் எடுத்து செல்வதும், அதை துரத்த முயலும்போது விரட்டி கடிக்க முயல்வதும் நடந்து வருகிறது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் குரங்குகளை பிடிக்க அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் ராமுவிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நடவடிக்கை மேற்கொண்டு வனத்துறை சாா்பில் தோப்பு தெரு பகுதியில் இருவேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டதில் அதில் சிக்கிய இரண்டு குரங்குகள் பிடிக்கப்பட்டு வனத்துறையில விடப்பட்டன. தொடா்ந்து அப்பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டு மீதமுள்ள குரங்குகளை பிடிக்கும் பணி தொடா்கிறது.

X
Dinamani
www.dinamani.com